பிரபாஸ் சொன்ன ஒரு வார்த்தையால் பிளானை மாற்றிய அனுஷ்கா
படங்களில் ஜோடியாக நடிக்கும் சில பிரபலங்கள் நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவது வழக்கம். அப்படி நிறைய பேர் இருக்கிறார்கள், ரசிகர்களுக்கு பிடித்த சில ஜோடிகளும் இணைந்திருக்கிறார்கள்.
தற்போது ரசிகர்களின் பெரிய ஆசையே பிரபாஸ், அனுஷ்கா நிஜ வாழ்க்கையில் இணைய வேண்டும் என்பது தான். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
பாகுபலி படத்திற்காக திருமணத்தை கூட தள்ளிப்போட்ட பிரபாஸ் அனுஷ்காவிற்கு ஒரு அறிவுரை கூறியுள்ளார்.
பாகுபலி படப்பிடிப்பின் போது அனுஷ்காவிற்கு மாப்பிள்ளை பார்ப்பதை தெரிந்து கொண்ட பிரபாஸ், அவரிடம் பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் முழு கவனம் செலுத்துங்கள் என்று தெரிவித்தாராம். இதையடுத்து தான் அனுஷ்கா தனது திருமணத்தை தள்ளிப் போட்டதாக கூறப்படுகிறது.
No comments: