புத்தள பகுதியில் நான்கு பெண்கள் மாயம்..!
புத்தள பகுதியில் நான்கு பெண்கள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
கடந்த 1 ஆம் திகதி புத்தல, ஊவா பெலவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதான தனது மனைவி காணாமல் போயுள்ளதாக, நபரொருவர் முறைப்பாடு செய்துள்ளார். அத்தோடு வெவேவெல பகுதியைச் சேர்ந்த 19 வயதான தனது மகளைக் கடந்த 2ஆம் திகதி முதல் காணவில்லை என, தந்தை ஒருவர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
அத்துடன் மஹசேன்புர குகுரன்பொல பகுதியில் 19 வயதான மகளைக் காணவில்லை என தாயொருவரும், 20 வயதான பெண்ணை காணவில்லை என உறவினர்களும் புத்தள பொலிஸில் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
மேலும் குறித்த நான்கு பெண்களின் உறவினர்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக புத்தள பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: