தற்கொலைக்கு இது தான் காரணம்- ப்ரியா ஓபன் டாக்
சின்னத்திரை சீரியல் மூலம் மிகவும் பிரபலம் ப்ரியா. இவர் தற்போது சீரியலில் நடிப்பதை தவிர்த்து வருகின்றார்.
இந்நிலையில் சின்னத்திரை பிரபலங்கள் தற்கொலை குறித்து இவர் மனம் திறந்து பேசியுள்ளார். இதில் இவர் கூறுகையில் ‘சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் வேலை குறித்து வீட்டில் மறைக்காமல் கூறவேண்டும்.
அப்படி இருந்தால் ஒரு பிரச்சனைகளுமே வராது. அந்த வகையில் இரவு வீட்டிற்கு தாமதமாக வந்தாலும், நமக்கென்ற ஒரு மரியாதை கொடுத்தால் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாது.
மேலும், சகிப்புத்தன்மை, பொறுமை இல்லாதவர்களே தற்கொலை முடிவை எடுக்கின்றனர், எந்த ஒரு பிரச்சனை என்றாலும் எதிர்த்து போராட வேண்டும்.
மற்றவர்களுடன் பேசி அதற்கு தீர்வு கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்’ என ப்ரியா கூறியுள்ளார்.
No comments: