ரேடியோ சிக்னல் ஒன்று பூமிக்கு வந்துள்ளது. 1.5 பில்லியன் ஒளி ஆண்டு தொலைவில்
சுமார் 1.5 பில்லியன் ஒளி ஆண்டு தொலைவில் இருந்து(வேற்று கிரகம் ஒன்றில் இருந்து) ரேடியோ சிக்னல் ஒன்று பூமிக்கு வந்தடைந்துள்ளது. பூமியில் உள்ள பல நாடுகளில் இதுபோன்ற டிஷ் அன்ரனாக்கள் உள்ளது. அவை வேற்று கிரகங்கள் மற்றும் பால் வெளி நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து வரும் சிக்னல்களை உள்வாங்க வல்லது. அமெரிக்க ஹவ்வாட் நிலையத்தில் இது போன்ற ஒரு பெரும் அன்ரனா உள்ளது. இதில் ஒரு சிக்னல் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. இது சுமார் 1.5 பில்லியன் ஒளி ஆண்டுகளை கடந்து பூமிக்கு வந்துள்ளது. ஒரு செக்கனில் ஒளியானது 1 லட்சத்தி 86,000 ஆயிரம் கிலோ மீட்டரை கடக்க வல்லது. அதனை 60 ஆல் பெருக்கி, பின்னர் 24 பெருக்கி பின்னர் 365ல் பெருக்கினால். அதுவே ஒரு ஒளி ஆண்டு ஆகும். அதாவது 97761600000 மைல்.
அப்படி என்றால் இந்த 97761600000 1.5 பில்லியனால் பெருக்க வேண்டும். அதுவே குறித்த சிக்னல் கடந்து வந்துள்ள தூரம் ஆகும். இந்த அளவுக்கு பவர்புல்லான ஒரு ரேடியோ சிக்னலை தயாரித்து அதனை அண்டவெளியில் அனுப்ப கூடிய சாதனத்தை வேற்று கிரக மனிதர்கள் உருவாக்கியுள்ளார்களா என்று விஞ்ஞானிகள் விவாதிக்கும் அதேவேளை. ஒரு நட்சத்திரம் எரிந்து முடிந்து கறுப்பு வளையமாக மாறும் பட்சத்தில் ஏற்படும் ஒரு பெரிய சக்த்தியே இவ்வாறு ஒரு வகை ரேடியோ சிக்னலாக வெளியாகி, பல மில்லியன் கிலோ மீட்டர்வரை செல்கிறது என்கிறார்கள் வேறு விஞ்ஞானிகள். வெறும் அரை மில்லி செக்கனே இந்த ரேடியோ சிக்னல் கொண்டுள்ளது. இதில் உள்ள ஒலியை விஞ்ஞானிகள் பரிசோதித்து வருகிறார்கள். அதில் ஏதாவது உள்ளதா என்று.
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டிய விடையம் என்னவென்றால், நமது பூமி அண்ட வெளியின் ஏதோ ஒரு மூலையில் அல்லது ஒரு இடத்தில் உள்ளது. ஒரு ஒளிக் கீற்றால் கூட சென்றடைய முடியாத அளவு இந்த அண்டவெளி நீளமாக இருக்கிறது. தன்னந்தனியே நாம் இந்த அண்டவெளியில், பால்வெளி நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள ஒரு சூரிய குடும்பத்தில் உள்ளோம். தனிமையாக உள்ளோம். ஒரு ஆனாதை போல. ஆனால் பூமியில் ஆளுக்கு ஆள் எதிரி, நாடுக்கு நாடு எதிரி ஏன் கண்டங்களுக்கு மற்றைய கண்டம் எதிரி. இப்படி ஒரு ஒற்றுமை இல்லாத வாழ்கையை நாம் வாழ்ந்து வருகிறோம். ஒரு நிமிடம் நின்று யோசித்தால் , எம் தனிமை புரியும். அன்பு மலரும். நாம் யார் என்பது புரியும் !
No comments: