யாழில் சிக்கிய ஆவாக்குழுவை சேர்ந்த 3 இளைஞர்கள்
ஆவா குழுவின் உறுப்பினர்கள் என கருதப்படும் மூன்று பேர் ஆயுதங்களுடன் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகளால் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.
19 23, மற்றும் 25 வயதுகளை கொண்ட அவர்கள் யாழ்ப்பாணம் – மானிப்பாய் மற்றும் ஆறுகால்மடம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்களிடம் இருந்து இரண்டு வாள்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: