பிரபல நடிகரால் தீக்குளித்த ரசிகன் மரணம்
கன்னட சினிமாவின் பிரபல நடிகர் யஷ். நேற்று இவரது பிறந்தநாள். ஆனால் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கூறியிருந்தார், காரணம் பிரபல நடிகர் அம்பரிஷ் அவர்களின் மறைவு தான்.
யஷ் பிறந்தநாளை கொண்டாடவில்லை என்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். அதிலும் ஒரு ரசிகர் பிறந்தநாள் அன்று அவரை காண முடியவில்லையே என்ற வருத்தத்தில் யஷ் வீட்டின் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவம் அறிந்த யஷ் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றும் வரும் ரவியை மருத்துவமனைக்கு சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார்.
ஆனால் 70% காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவர் இப்போது சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். கடைசியாக இறப்பதற்கு முன் தன் ஆசை நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
No comments: