இலங்கை அரசின் அதிரடி முடிவு
நைஜீரிய நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கை வீசா வழங்குவதனை வரையறுப்பதற்கு குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சுற்றுலா மற்றும் வர்த்தக வீசா அடிப்படையில் நாட்டுக்குள் பிரவேசிக்கும் நைஜீரிய பிரஜைகளுக்கு வீசா வழங்குவதனை நிறுத்திக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு கணனி குற்றச் செயல்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் நைஜீரிய பிரஜைகளுக்காக இலங்கையர் எவரேனும் பிணை நிற்காவிட்டால் வீசா வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வந்த நைஜீரிய பிரஜைகளில் மூன்றில் ஒரு பங்கினர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குற்றச் செயல்களில் ஈடுபட்ட நியூசிலாந்து பிரஜைகள் சிலருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன், சிலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
No comments: