Header Ads

Header Ads

ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் பணம் பெற்ற சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புலம் பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களிடம் ஏமாற்றி பணம் பெற்று வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ச்சியாக குற்றம் சாட்டிவருகிறார். அதேபோல், சீமான் குறித்தும் அக்கட்சியின் நடவடிக்கைகள் பல குறித்தும் பேசுவதற்கு பல தரவுகள் எங்களிடத்தில் இருக்கிறது. நாகரீகம் கருதி அமைதி காக்கிறோம். தேவை ஏற்படின் அவற்றை வெளியிடுவோமென ஈழ ஆதரவாளரான திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். தமிழர் விடியல் கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களும் சீமான் மீது பல பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
ஆனால், மேற்கண்டவை எல்லாம் மாற்று கட்சியில், இயக்கத்தில் உள்ளவர்களால், இணைந்து செயல்பட்டு முரண்பாடு கொண்டு பின்னர் விலகியவர்களால் முன்வைக்கப்பட்டவை. ஆனால், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த வியனரசு, சமீபத்தில் சீமான் மீது ஓர் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.
அது சீமான் ஸ்டெர்லைட் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பணம் பெற்றுவிட்டதாக மக்கள் பேசுவதால் விளக்கம் தேவை என்பதுதான். அதேபோல், காவிரிக்காக உயிர் நீத்த விக்னேஷ் பெயரைச் சொல்லி பணம் பெற்று கட்சியினர் ஏமாற்றுவதாக விக்னேஷின் பெற்றோர்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கும் சீமான் விளக்கமளிக்க வேண்டுமென கோரி அவருக்கு கடிதம் எழுதியிருந்தார் வியனரசு.
ஆனால், வியனரசுவை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் சீமான். தமிழ்த்தேசிய போராட்ட களத்தில் பெரும்பான்மையோரால் அறியப்பட்டவர் வியனரசு. ஸ்டெர்லைட் உள்ளிட்ட போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றவர். ஸ்டெர்லைட் போராட்டத்தில் அவர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோதும் பிணையில் எடுக்க கட்சி முயலவில்லை என வியனரசு போல தலைமை மீது அதிருப்தி கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Powered by Blogger.