அமெரிக்காவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இந்தியருக்கு நேர்ந்த கதி
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் கொள்ளையர்களால் கடத்தி துப்பாக்கியால் சுடப்பட்ட தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த என்ஜினீயர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சாய் கிருஷ்ணா என்ற இளைஞர் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாநிலத்தில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிகல் என்ஜினீயரிங் பட்டம்பெற்று அங்குள்ள டெட்ராய்ட் நகரில் பணியாற்றி வருகிறார்.
கடந்த மூன்றாம் தேதி இரவு பணி முடிந்து சாய் கிருஷ்ணா தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். டெட்ராய்ட் புறநகர் பகுதியில் அவரது காரை ஒரு கும்பல் வழிமறித்தது. காருக்குள் ஏறிய சிலர் துப்பாக்கி முனையில் சாய் கிருஷ்ணாவை ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிக்கு காருடன் கடத்திச் சென்றனர்.
ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தினர். சாய் கிருஷ்ணாவிடம் இருந்த பணம், கைபேசி உள்ளிட்ட பொருட்களை எல்லாம் பறித்தனர். துப்பாக்கியால் அவரை சுட்டு வீழ்த்திய பின்னர் காரை கடத்திச் சென்றனர்.
பின்னர், அவ்வழியாக சென்ற ஒருவர் உறையும் குளிரில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சாய் கிருஷ்ணாவின் நிலையை பற்றி போலீசாருக்கு தகவல் அளித்தார்.
No comments: