பிரித்தானியாவில் சகோதரி கண்முன்னே ஓட ஓட மர்ம கும்பலால் வெட்டப்பட்ட நபர்! வெளியான அதிர்ச்சி வீடியோ
பிரித்தானியாவின் Liverpool பகுதியின் Vauxhall-ல் இருக்கும் Everydayz shop-க்கு வெளியில் பெயர் தெரியாத நபர் ஒருவர் நின்றுள்ளார்.
அப்போது திடீரென்று வந்த மர்மகும்பல் அவரை கத்தியால் தாக்கியது. இதனால் அந்த நபர் தன்னுடைய உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக ஓடியுள்ளார்.
இருப்பினும் அந்த கும்பல், அவரை விரட்டி தொடர்ந்து வெட்டியது. இதைக் கண்ட அந்த நபரின் சகோதரி, அங்கிருந்தவர்களை நோக்கி உதவி செய்யுங்கள், பொலிசாரை கூப்பிடுங்கள் என்று கத்துகிறார்.
இந்த சம்பவத்தை அங்கிருக்கும் நபர் ஒருவர் தன்னுடைய மொபைல் போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.
மேலும் பாதிப்புக்குள்ளான நபரின் பெயர் ஸ்டீபன் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் எதற்காக நடந்தது என்பது குறித்தும் எந்த ஒரு தகவலும் இல்லை.
ஆனால் அந்த நபரின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்து இல்லை. உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.
அதே போன்று அந்த நபரின் சகோதரிக்கும் சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
No comments: