இலங்கை சென்ற ரஷிய பிரஜை செய்த கேவலமான செயல்
7 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ரஷ்ய பிரஜை ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (21.01.2019) காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே குறித்த ரஷ்ய பிரஜை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
பாதிக்கப்பட்ட சிறுவன் தனது நண்பர்களுடன் சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டிருந்த வேளையில் அவ்வழியே வந்த சைக்கிள் ஓட்டி வந்த சந்தேக நபர் சிறுவனை சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளார்.
இதனையடுத்து நீண்ட நேரமாகியும் சிறுவனை காணாது தேடிய குடும்பத்தினர் சிறுவன் கடற்கரையில் அழுதுகொண்டிருந்த நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments: