பெற்ற தாய்க்கும் மாமியாருக்கும் பாலியல் சீண்டல் கொடுத்த மகன்
மாமியார் மீது பாலியல் இச்சை கொண்டிருக்கும் நிறைய பேரை பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். கதைகளில் கூட படித்திருப்போம். ஆனால் யாராவது சொந்த தாய் மீது பாலியல் இச்சை கொள்வார்களா? நிச்சயமாக இருக்காது.
பாலியல் கதைகளில் வேண்டுமானால், இதுபோன்ற கன்றாவி கதைகளெல்லாம் இருக்கலாம்.
ஆனால் நிஜ வாழ்க்கையில், அதிலும் நம்முடைய நாட்டில் இப்படியெல்லாம் எங்கேயாவது கதை கேட்டிருக்கிறோமா?ஆனால் அப்படி ஒரு காமக் கொடுரன் செய்த கேவலமான செயலைப் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
அந்த கூத்தை நீங்களே கேளுங்க. அவன் ஒரு காமக் கொடூரன். பெயர் சுரேஷ் (மாற்றப்பட்டுள்ளது) அவனுக்கு வயது முப்பத்தைந்துக்கு மேல் இருக்கும். அவன் பால் வியாபாரம் செய்து கொண்டும், மற்ற நேரங்களில் கூலி வேலையும் செய்து வந்தான்.
தன்னுடைய மகனுக்கு முப்பது வயதைத் தாண்டியதால் அவனுடைய பெற்றோர்கள் தன்னுடைய மகனுக்கு மிக வேகமாகத் திருமணம் செய்து வைப்பதற்காக பெண் தேடி வந்தனர்.
அந்த நிலையில் தான் ஒரு அழகான பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். திருமணம் ஆகி ஒரு வருடத்திலேயே அழகான பெண் குழந்தையை அவனுடைய மனைவி பெற்றெடுத்தாள். அந்த பெண் குழந்தைக்கு ஐந்து வயது நிறைவடைந்து விட்டது. இந்த நிலையில் தான் வீட்டில் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிவிட்டது.
அந்த காமக் கொடூரனுக்கும் அவனுடைய மனைவிக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் அவனுக்கு சில பெண்களுடன் தொடர்பு இருந்திருந்திருக்கிறது.
அதை எதிர்த்துக் கேட்ட மனைவியை அடிக்கடி அடித்து உதைத்து கொடுமைப்படுத்திக் கொண்டே இருந்தான். அடிப்பது துன்புறுத்துவது என்று அவனுடைய கொடுமைக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.
மனைவியின் கண்ணீர் கதையும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்படியிருக்க, இவனுடைய காம இச்சைக்கு அளவில்லாமல் போனது. தான் தாலி கட்டிய மனைவியின் முன்பாகவே தன்னைப் பெற்ற தாயின் மீது காம இச்சை கொண்டான். அதுமட்டுமின்றி, மனைவியின் முன்பாகவே தாய்க்கு பாலியல் தொல்லைக் கொடுத்துக் கொண்டே இருந்தான்.
இதனால் மனைவியும் அவனுடைய தாயும் பெரும் வேதனை அடைந்தார்கள். தன்னுடைய கண் முன்னாலேயே தன்னுடைய கணவன் அவன் தாய்க்குக் கொடுக்கின்ற பாலியல் சீண்டல்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அருவருப்படைந்த அந்தப் பெண் ஒரு நாள் இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டாள்.
தன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் தன்னுடைய மகளை அடித்து கொடுமைப்படுத்தியே கொன்று விட்டதாக போலீசில் புகார் கொடுத்தார் மாமியார்.
விசாரணைக்குப் பிறகு, அந்த காமப்பிசாசு சிறையில் அறைக்கப்பட்டான். சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளியே வந்த அவன் அவ்வப்பபோது பக்கத்து ஊரில் இருக்கின்ற மாமியார் வீட்டுக்குப் போய், அவரிடம் பணம் கொடுக்கும்படி டார்ச்சர் செய்வது, தன்னுடைய குழந்தையைத் தன்னிடம் கொடுக்கும்படி டார்ச்சர் செய்வது என்று கொடுமை அளவுக்கு மீறிப் போய்க் கொண்டிருந்தது.
பணம் கேட்டுத் தொல்லை செய்து மட்டுமில்லாது, குடி போதையில் சென்று தன்னுடைய மாமியாரை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். இந்த விஷயம் வெளியில் அக்கம் பக்கத்தாருக்குத் தெரிந்தால், அவனமாகிப் போகும் என்பதற்காக தனக்குள்ளாகவே போட்டுப் புழுங்கிக் கொண்டிருந்தார்.
அதனால் அவன் கேட்கிற பொழுது பணமும் கொடுத்து வந்தார். ஒரு நாள் தன்னுடைய மாமியாரை மிரட்டுவதற்காக இரண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கிக் கொண்டு, ஒரு கத்தியையும் எடுத்துக் கொண்டு மாமியார் வீட்டுக்குப் போனான். அப்போது மாமியாரிடம் பணம் கேட்டு மிரட்டி, பேத்தியையும் பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.
அதன்பின் போதையில் தூங்க நிலைக்குப் போய்விட்டான்.
தன்னுடைய உயிரையும் தன்னுடைய பேத்தியின் உயிரையும் காப்பாற்றிக் கொள்வதற்காக அவன் கொண்டு வந்த பெட்ரோலை அவன் மேலேயே ஊற்றிவிட்டு, வீட்டைவிட்டு தன்னுடைய பேத்தியையும் தூக்கிக் கொண்டு வெளியே வந்து கற்பூரத்தைக் கொளுத்தி வீட்டுக்குள் போட்டதும், தீ பற்றி எரியத் தொடங்கியது. அக்கம் பக்கத்தினர் புகை வருவதைக் கண்டு தீயணைப்புத் துறைக்கு தகவல் அனுப்பி புகை அணைக்கப்பட்டது.
அதன்பின்னர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டான்.
தன்னுடைய மகனின் சாவில் மர்மம் இருப்பதாக சுரேஷின் தந்தை காவல் துறையில் புகார் கொடுக்க, அதற்கு முன்பாகவே தன்னுடைய பேத்தியுடன் சென்று தன் ஊரின் வீஏஓவிடம் தான் தான் தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கான பெட்ரோல் ஊற்றி எரித்ததாக சொல்லி சரணடைந்தார்.
இப்படி அளவுக்கு அதிகமாக குடிபோதை மற்றும் வரைமுறை இல்லாத காம இச்சைகளால் தான் பல குடும்பங்கள் இருந்த இடம் தெரியாமல் நாசமாகிப் போகின்றன. காம என்பது அளவை மிஞ்சுகிற போது என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் இதுபோன்ற பல விபரீதங்கள் நிகழ்ந்து விடுகின்றன.
No comments: