தாய்லாந்து மக்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்
தாய்லாந்தில் மாடி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
தாய்லாந்து நாட்டின் ரோய் இட் மாகாணத்தில் உள்ள பனோம் பிராய் மாவட்டத்தில் இருந்து தலைநகர் பாங்காக்குக்கு மாடி பஸ் சென்றுகொண்டிருந்தது. இந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் கோலோங் லுவாங் மாவட்டத்தில் உள்ள ஒரு சாலையில் சென்றுகொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது. பின்னர் அந்த பஸ் சாலையில் கவிழ்ந்தது.
இந்த பஸ் கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 50 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
No comments: