பறிபோனது சம்பந்தனின் பதவி !எதிர்க்கட்சித் தலைவரானார் மஹிந்த ராஜபக்
எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.ஆளும் கட்சிக்கு அடுத்தப்படியாக அதிக உறுப்பினர் கொண்ட கட்சியின் உறுப்பினருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும். அதற்கமைய அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
எனினும், தாமரை மொட்டு தலைவராகிய மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்குவது எப்படி என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.மஹிந்தவின் கட்சி விவகாரம் குறித்து நாளை ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியின் உறுப்பினர், எதிர்க்கட்சி தலைவராகலாம் என்ற சபாநாயகரின் கருத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
No comments: