Header Ads

Header Ads

யாழில் இராணுவத்திடமிருந்து மீண்ட வீடுகளின் நிலை இதுவா?

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் ஒருதொகை காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் காணிகளுக்குச் சொந்தமான மக்கள் ஆர்வத்துடன் தமது வீடுகளை பார்த்துவருகின்றனர்.

தசாப்தங்கள் கடந்து மக்கள் தமது சொந்த வீடுகளைக் கண்டு ஆனந்தக் கண்ணீருடன் மிகுந்த மகிழ்ச்சியினை வெளிப்படுத்திவருகின்றனர் என்று எமது பிரதேச செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட 45 ஏக்கர் காணிகளின் அடிப்படையில், தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணியும், ஒட்டகபுலத்தில் 15 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டன.

மேலும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் அதி உயர் பாதுகாப்பு வலய பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த குறித்த பகுதிகளிலுள்ள கணிசமான வீடுகள் நல்ல நிலையில் உள்ளதாகவும் சில வீடுகள் திருத்தி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளே நீண்டகாலப் பாவனை இருந்துவந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் நேரில் கண்டவர்களால் கூறப்பட்டுள்ளது.

அதுதவிர வீடுகளில் போர் குறித்த புடைப்புச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிங்கள மன்னர்கால போர் நிகழ்வுகளும் தற்போதைய இராணுவத்தின் துப்பாக்கி முனைப் போர் நிகழ்வுகளும் புடைப்புச் சிற்பங்களாக்கப்பட்டுள்ளன.

No comments:

Powered by Blogger.