சர்ச்சையில் மலிங்கவின் மனைவியும் திசரபெரேராவும்
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் லசித் மாலிங்கவின் மனைவி தொடர்பில், அணியின் சிரேஸ்ட வீரர் திசர பெரேரா முறைப்பாடு செய்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வாவிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் தம்மையும் தமது மனைவியையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ச்சியாக பதிவுகளை இட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
உலகக் கிண்ணப் போட்டித் தொடர் நடைபெறவுள்ள நிலையில், அணிக்குள் பிளவுகள் இருக்கக் கூடாது எனவும் ஒரே அணியாக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு போட்டியில் திறமைகளை வெளிப்படுத்த தவறினாலும் நிச்சயமாக தம்மை அணியிலிருந்து நீக்குவதற்கு திட்டமிடப்படுவதாகவும், கடுமையான மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திசர தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட குரோத உணர்வுகளினால் தற்பொழுது ஒட்டுமொத்த நாடே கிரிக்கட் வீரர்களை பார்த்து எள்ளி நகையாடக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அணியின் தலைமைப் பொறுப்பில் மாற்றத்தை செய்வதன் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த தகவல் சமூகவலைத்தளத்தில் வைரலாக ரசிகர்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர்.
No comments: