ஜேர்மனியில் நடந்த அடுத்த காட்டிக் கொடுப்பு: தமிழனே தமிழனுக்கு எதிரி
2005ல் இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமரை நாம் மறந்திருக்கமாட்டோம். இவர் சந்திரிக்கா பண்டார நாயக்கவின் அறிவிக்கப்படாத புருஷனும் ஆவார். இவர் கொழும்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட விடையம் உலகறிந்த ஒன்று. தமிழனாக இருந்தும். சிங்களவர்களுக்கே வாலாட்டி திரிந்தவர் இவர். இவர் சிவாஸ் ரீகல் விஸ்கியை மாலை 7 மணிக்கு அடித்துவிட்டு. பின்னர் நீச்சல் உடையை போட்டுக்கொண்டு. தனது வீட்டு நீச்சல் குழத்தில் குதித்தார். பின்னர் வெளியே வரும் வேளை, ஸ்னைப்பர் தாக்குதலுக்கு உள்ளானார். (இது ரகசிய செய்தி, மேலும் பல நூறு விடையங்கள் இதில் அடங்கியுள்ளது. இதனை பின்னர் பார்கலாம்.)
இக் கொலையோடு தொடர்புடைய நபர் ஜேர்மனியில் வைத்து நேற்றைய தினம்(17) கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 39 வயதாகும் நவனீதனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஜேர்மனியில் எந்த ஒரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை. ஆனால் ஜேர்மன் பொலிசாருக்கு சில தமிழர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் தான் இவரை ஜேர்மன் பொலிசார் கைதுசெய்துள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. ஆக மொத்தத்தில் சிங்களவன் எல்லாம் வந்து எம்மை வெல்லவேண்டிய அவசியமே இல்லை. காட்டிக் கொடுப்பில் நம்பர் 1 நாங்களே தான். !
எங்களை மிஞ்ச ஆட்களே இல்லை ! ஒருவரை பிடிக்கவில்லை என்றால் போதும். உடனே வேற்றின மக்கள் என்று கூட பாரமல் எங்கள் இனத்தை நாமே உடனே காட்டிக் கொடுக்கும் ஈனப் பிறவிகளாக சில தமிழர்கள் மாறிவிட்டார்கள். விடுதலைப் புலிகளை சர்வதேச அரங்கில், பயங்கரவாதிகள் ஆக்கியது இந்தக் கதிர்காமர். பச்சை தூரோகம் இழைத்தது இந்தக் கதிர்காமர். ஆனால் இன்று எமது இனத்திற்காக போராடிய இளைஞர்களை இவ்வாறு காட்டிக் கொடுக்கும் தமிழர்களே சற்று சிந்தியுங்கள். நீங்கள் காட்டிக் கொடுப்பது உங்கள் இனத்தை ! இனத் துரோகியாக மாறவேண்டாம் !
No comments: