யாழ் மண்ணில் இலங்கை அரச அதிகாரிகளினால் விதிகளை மீறிய சின்னம் K.K.S பகுதியில் உருவாகின்றதா?
K.K.S பகுதியில் பாரிய ஆபத்தை தன்னகத்தே கொண்ட எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை பல இன்னல்களை முப்பது வருடத்துக்கு மேல் அனுபவித்து தற்போது சொந்த இடங்களில் மீள்குடியேறி வரும் குடியிருப்புகளை மீண்டும் மிரட்டும் வகையில் இலங்கையில் அனைத்து சட்டங்களையும் மீறும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றது.
இவ் மீள்நிரப்பு நிலையம் அமைக்க போதிய இடவசதி இன்மை என்பது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பும் நன்கு அறிந்த விடயம். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கே அனைத்து உரிமையும் கொண்ட ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம். மீள்நிரம் hணம் செய்து கொள்ளும் போர்வையில் இதன் அதிகாரிகள் பெற்றோலிய அமைச்சில் இருந்து பல இலட்சம் ருபாய்களை பெற்றுக்கொண்டு இதற்கான கட்டுமானப் பணிகளை சட்டவிரோதமாக மேற்கொண்டு செல்வதற்காக பல அதிகாரிகளை இதற்கு பயன்படுத்தி தங்களுடைய செயற்பாடுகளை சூட்சுமமாக மேற்கொண்டு வருவதுடன் இதற்கான போதிய இடவசதி இன்மையினால் வீதி அதிகாரசபை இதற்கான அனுமதியை மறுத்து எழுத்து மூலமாக அறிய தந்துள்ளதாக இதன் பொறியியளாளர் திரு. வீ. சுதாகர் தெரிவித்துளள்மை குறிப்பிடப்படுகின்றது.
இதன் கட்டுமான எல்லையில் இருந்து ஏழு அடிகள் இருக்க வேண்டும் என்ற நிலையில் இருக்க இடப்பற்றாக்குறையும் வீதி அதிகாரசபையின் தலையடு காரணமாக எல்லையில் உள்ள வீட்டின் சமையல் அறையிள் புகை போக்கிற்கு மிக அருகாமையில் இதன் களஞ்சியசாலை அமைக்கப்படுவதுடன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து 22 அடி தூரத்திற்கு அப்பால் தீ அபாய அமைவிடம் அமைய வேண்டும் என்ற ஆபத்துக்கான செய்திக் குறிபபுகள் உள்ள நிலையில்
இவ் அப்பாவி பொது மக்களின் குடியிருப்பை ஆக்கிரமித்து வாழ்வதற்கான உரிமை மறுக்கும் அளவுக்கு இதன் கட்டுமானப்பணிகளை கண்டும் காணாமல் இருக்கும் அதிகாரிகளின் நோக்கம் என்ன?
பெற்றோலிய கூட்டுத்தாபன சில அதிகாரிகளே இதன் அமைவிடம் பற்றிச் சினந்து கொண்டுள்ள போதும் இவ்வாறான பாரிய வருங்கால ஆபத்து யாருடைய சுயலாபத்திற்காக அப்பாவிகளின் குரல்வளையை நசுக்க முற்படுகின்றனர்.
இவ்வாறான மீள்குடியேற்ற மக்கள் தொடர்பாக பல போராட்டஙக் ளை செய்யும் அமைப்புக்கள் இக்குடியிருப்புக்களை கண்டும் காணாமல் விடுவது அதிகாரிகளின் நேர்மையின் சின்னமா?
காற்றில் எரிபொருட்கள் வெப்பத்தின் காரணமாக ஆவியாகும் என்பதற்காக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அதற்காக போதிய பெற்றோல் கழிவாக வழங்குகின்றது. இவவ்hறான வழியில் எரிபொருட்கள் மிக அருகில் உள்ள புகை போக்கியில் இருந்து வரும் நெருப்பு துணிக்கையுடன் சேரும் போது பாரிய தீ ஆபத்து தடுக்க முடியாத
ஒன்றாக இருக்கும். இங்குபொருத்தப்பட்டுள்ள தாங்கியின் மொத்த கனவளவு 39000L ஆகும். இதன் விளைவு
கற்பனைக்கு எட்டாத ஒரு விடயமாக அமையும் என்பது நிச்சயம்.
மீள்நிரப்பு நிலையத்தின் கட்டுமாணம் தொடர்பாக பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிற்கு அறியத்தந்தும் அதன் செயற்பாடுகள் திருத்தப்படாமலே இருக்கின்றன. இதன் செயற்பாடுகள் வருகின்ற நாட்களில் யாழ் அரச அதிபரால் திறந்து வைக்கப்பட உள்ளது. இவ் சட்டவிரோத கட்டட செயற்பாடுகளிற்கு யாழ் அரச அதிபரே தலைமை தாங்குகின்றாரோ என்ற ஐயம் உருவாகின்றது. மீள்குடியேற்றங்க்ளை நடத்தவேண்டிய அதிகாரிகளே இவ்வாறான பாரிய ஊழல்களிற்கு துணைபோவது நியாயமானதா?
No comments: