Header Ads

Header Ads

மலையகத்திற்கு அடுத்து தலைவராகப்போவது திகாம்பரமா ?வடிவேல் சுரேஸா?

மலையக மக்களை சிறந்த முறையில் வழி நடாத்தி செல்ல திறமையான தலைவர்கள் இல்லாமையால் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் இவ்வேளையில் மலையகத்திற்கு தற்பொழுது மிக சிறந்த தலைமைத்துவமே தேவையென மக்கள் அலைகின்றார்கள். 

 அதன் காரணமாகவே மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தலைவிரித்தாடுகின்றது எனலாம். இது சம்பந்தமாக எமது செய்தி சேவையின் செய்தியாளர்கள் மலையகத்தின் பல பகுதிகளுக்கும் விஜயத்தை மேற்கொண்டதோடு அப்பகுதியில் இருக்கும் தோட்ட தொழிலாளர்களையும் பிரதேச கல்விமான்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதர மலையக மக்களிடம் கருத்து கணிப்பை மேற்கொண்ட போது எமக்கு பலவிதமான கருத்துக்களை அவதானிக்ககூடியதாக இருந்தது. 

 அந்த வழியில் மலையக மக்களில் பெரும்பான்மை மக்களின் கருத்துப்படி மலையகத்திற்கு தலைமை தாங்க தற்போது அவசியம் சிறந்த தலைமைத்துவம் என்பதை பெரும்பான்மையான மக்களின் கருத்துக்களில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது. அவ்வாறான தலைவர்களாக தற்போதுள்ளவர்களில் இருவரான திகாம்பரம், வடிவேல் சுரேஸின் பெயர்களையே நாம் அறியக்கூடியதாக உள்ளபோதிலும் ஏனையவர்களின் பெயர்களை அறிய முடியாதது கேள்விக்குரியாகவே இருக்கிறது. 

 பொதுவாக இதொகா தலைவர்ஆறுமுகன் தொண்டமானின் பெயர் மங்கிபோய்விட்டதைப்போல் அமைச்சர் மனோகணேசனைப்பற்றிய கருத்து தெரிவித்தவர்கள். அவர் கொழும்பு மாவட்டத்தைவிட்டால் வேறுவழி தெரியாதவர் என்றும் அறிக்கைவிடுவதில் மன்னராக இருந்தாலும் அவரால் இம் மக்களுக்கு செய்த சேவை என்ன என்பது யாருக்கும் தெரியாது என்ற கருத்தையே அறியக்கூடியதாக இருந்தது. அமைச்சர் இராதகிருஸ்ணண் அவரை பற்றிய கருத்தாக அவர் வடபகுதிக்கான அமைச்சராக செயல்பட்டவர் என்பதோடு மலையகத்தில் வாக்குகளைப்பெற்று வடக்கிற்கு சேவை செய்தபோதிலும் மலையகத்தில் தேசிய பாடசாலைகள் இல்லையென்பதை மலையக மக்கள் அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் சில கல்விமான்கள் கருத்துக்களில் 

தெரிவிக்கப்பட்டதைப்போல் தற்பொழுது நுவரெலியா மாவட்டத்தில் தனது அனுபவத்தை அடிப்படையாக வைத்து கல்வியை மேம்படுத்த பாடுபடுவதையும் பல பாடசாலைகளுக்கு தற்போது விஜயம் செய்து பலவிடயங்களை செய்துவருவதையும் அதேபோல் ஸ்ரீ பாத கல்லுாரியில் அண்மையில் ஏற்பட்ட அருவருக்க தக்க சம்பவங்களுக்கு நல்ல முறையில் தீர்வு கண்டவிடயத்தையும் மக்கள் தங்களது கருத்துக்களில் கூற தவறவில்லை எப்படியாகினும் தேர்தல் வருடத்திலேயே அவர் மலையகத்தை பற்றி சிந்தித்து செயல்படுவதாகவும் சிலர் குறிப்பிட்டதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். சர்ச்சைக்குள் 

சிக்கி விமர்சனங்களுக்கு பெயர் பெற்ற வடிவேல் சுரேஸ் அவர்களைப்பற்றி ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளி வந்த போதும் மக்களிடம் சில மாறுபட்ட கருத்தை அவதானிக்கமுடிந்ததாகவும் அவர் கட்சிகள் மாறியபோதும் அப்படி மாறிய கட்சிகளில் இருந்து மலையக மக்களுக்காக பல்வேறுபட்ட சேவைகளை செய்து வந்ததாகவும் அதில் குறிப்பாக ஊவா மாகாணத்தில் மூடிக்கிடந்த பல தோட்ட வைத்தியசாலைகளை புனர் நிர்மானம் செய்து அரசாங்க வைத்தியசாலைகளாக மாற்றி திறந்துவைத்து அந்த வைத்தியசாலைகளை திறம்பட செயல்படவைத்ததைப்போல் ஏனைய மாகாணங்களிலும் அவ்வாறு தோட்ட வைத்தியசாலைகளை

 அரசாங்கம் சுவீகரித்து திறம்பட செயல்படவைத்த பெருமை அவரையே சாரும் என்றும், அத்தோடு மட்டுமல்லாது மலையக இளைஞர்களை அரசாங்க வைத்திய சாலையில் நியமித்தவர் என்ற பெருமையையும் ஊவாவில் சுமார் 150 பாடசாலைகளில் இருந்து வந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து மலையக மக்களின் மனதில் இடம்பிடித்தவர் என்றும் கருத்துக்கூறினார்கள். அத்தோடு இவர் தோட்ட மக்களின் சம்பள உயர்வுவிடயத்தில் தன்னால் முடிந்த நடவடிக்கையை எடுத்ததோடு அவருக்கு ஐ.தே.க கட்சியின் ஆணையை மீறி செயல்பட முடியாதென்பதை மக்கள் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் சில தொழிலாளர்கள் குறிப்பிட்டதையும் 

எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதேபோல் அமைச்சர் திகாம்பரத்தை பற்றி கருத்துக்கூறிய மக்கள் இதொகா தலைமைகள் தனி வீட்டு திட்டம் என்பது ஓர் பகல் கனவு என்றும் அதை எக்காலத்திலும் நடைமுறை படுத்த முடியாத ஒன்று எனவும் தனி வீட்டுத்திட்டம் என்பது ஓர் பகல் கனவாகவே தோட்ட தொழிலாளர்கள் காண முடியும் என்று கூறியவர்களின் எண்ணக்கனவை உடைத்தெரிந்து தோட்ட மக்களுக்கான தனி வீட்டு திட்டத்தை மிக சிறப்பாக அமுல்படுத்தியவர் என்பதோடு வெளிப்படையாக எந்த விடயமாக இருந்தாலும் கூறி அதை செயல்படுத்த முயலும் ஒருவராகவே திகாம்பரத்தை காண முடிகின்றது என்ற கருத்தை கூறிய மக்கள் எதிர்காலத்தில் மலையக மக்களின் நலனுக்காக 

மலைநாட்டு கிராம அதிகார சபையை ஏற்படுத்தியுள்ளதையும் அது எவ்வாறு மக்களுக்கு சேவையாற்றும் என்பதை பொருத்திருந்து பார்க்கவேண்டும் என்றாலும் அவரின் இந்த முயற்சி பாராட்டுக்குறியதொன்றாகும் எனவும் கூறப்பட்டது. இதொகா 38 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்த அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட்டபோதும் மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்காது அவர்களை பயன்படுத்தி சிலரை வாழவைத்த கட்சியாகவே பார்ப்பதாகவும் ஆனால் வடிவேல் சுரேஸ் கட்சி மாறிய போதும் அதன் மூலம் மலையகமக்களுக்கு பல சேவைகளை செய்யவே என்று அவர் கூறும் கருத்தை நாம் ஏற்பதாகவும் அதே போல் அதைச்சர் திகாம்பரம் அவர்களும் தனது அமைச்சின் மூலம் அமைக்கப்படும் தனி வீட்டுத்திட்டத்தை தான் வாக்கு பெறும் மாவட்டத்தை மட்டும் கட்டு படுத்தாது முழு மலையகத்திற்கும் தனது சேவையை விரிவாக்கி செயல்படுவதாவும், இந்த இரண்டு பேரும் ஒற்றுமையாக செயல்பட்டால் மலையகத்திற்கு சிறந்த தலைமைத்துவத்தை அந்த இருவராலும் வழங்க முடியும் என்ற 

கருத்தை காணக்கூடியதாக இருந்தது. இந்த சம்பள உயர்வு போராட்டத்தின் மூலம் தற்பொழுது சில கருத்துகள் உணர்வு பூர்வமாவும், உணர்ச்சி பூர்வமாகவுமே இருக்கின்றது. இதனால் மலையகம் அரசியல் ரீதியான செல்வாக்கினை சில வேளைகளில் இழக்கவும் நேரிடலாம். இதனால் பெருந்தோட்ட மக்கள் ஒற்றுமையாக உணர்வு பூர்வமாக சிந்தித்து அரசியல் பலத்தை சிதறடிக்காது அரசியல் பலத்தை அதிகரிக்க மலையக தலைமைகளை ஒற்றுமைப்படுத்தி முஸ்லிம் மக்களை போல தங்களுக்கு தேவையான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டுமென்ற கருத்தும் விரிவடைய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளமையும் கவனத்தில் இருக்கவேண்டியது அவசியமாகும். ஆகவே மக்கள் கூறிய இந்த கருத்துக்களையும் முழு மலையக கருத்தாக தீர்மானிக்கும் சக்தி மலையக மக்களிடமேயன்றி வேறு யாருக்கும் கிடையாது என்பதே சரியான கருத்தாகும்.

No comments:

Powered by Blogger.