மட்டக்களப்பில் சிக்கிய பிரபல ஊழல் ஆசாமியின் இன்னும் பல ஆதாரங்கள் கசிந்தது
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகம் முன் பொது மக்களுக்கான தினத்தில் தனது சுயநலத்திற்காக ஊழல் பிரதேச செயலாளர் நா.வில்வரெத்தினம் தனது ஊழியர்களை மிரட்டி தனக்கு ஆதரவாக இணையத் தளத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யத் துாண்டியுள்ளார்.
ஆனால் மக்களைப் பற்றி சிறிதளவும் சிந்திக்காத ஊழல் பிரதேச செயலாளர் நா.வில்வரெத்தினம் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எதையும் செய்யத் தயார் இவர் மட்டுமல்ல இவரது பாரியாரும்.
இன்று தான் நல்லவர் என காட்ட முற்பட்டதை மக்கள் முட்டாள் தனம் எனக் கூறினாலும் இன்றைய ஆர்ப்பாட்டத்தால் பாதிக்கப் பட்டது மக்கள் என்பதை இங்கு வேலை செய்யும் ஊழல் பிரதேச செயலாளர் நா.வில்வரெத்திணத்தினம் மற்றும் கிராமசேவையாளர் - பிரதேச செயலக உயர் அதிகாரிகள் சிலர் உணர மாட்டார்கள் இதனால் பாதிக்கப் பட்டது யார் என பார்த்தால்...
வழமையாக புதன்கிழமைகளில் பொது மக்களது பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் முகமாக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கடமையாற்ற வேண்டிய நாளாக பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு பிரகடணம் செய்துள்ளதாகவும் அன்றைய தினத்தில் உத்தியோகத்தர்கள் விடுமுறை பெற கூட அனுமதியில்லை என அறிவித்தல் உள்ள நிலையில் இந்த பிரதேச செயலாளரின் முட்டாள் தனமான முடிவுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் பட உள்ளது.
அப்படியால் உத்தியோகத்தர்கள் இந்த தினத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தலாமா? இதை உரிய அதிகாரிகள் கண்காணிப்பதில்லையா?? இவர்களிற்கு நடவடிக்கை இல்லையா??
ஊடக சுதந்திரத்தை தனக்கு எதிராக தவறாக பயன்படுத்தியதாக தனக்கு கீழ் உள்ள அரச அதிகாரிகளை வற்புறுத்தி எமது ஊடகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வைத்த செங்கலடி பிரதேச செயலாளர் திரு வில்வரெட்ணம் அவர்களின் ஊழல்கள் பல ஆதாரத்துடன் எமது இணைய ஆசிரியர் குழுமத்திடம் உள்ளது.
அதனை முழுமையாக பிரசுரிக்காது விட்டதன் விளைவே எமக்கிருந்த ஊடக சுதந்திரத்தை தவறாகத்தான் பயன்படுத்தி உள்ளோம். என அர்த்தம்
இனிமேல் அதனை சரியாக பயன்படுத்தி ஊழல் வாதிகளை முழுமையாக அம்பலப் படுத்துவோம்.
செங்கலடி பிரதேச செயலாளர் திரு வில்வரெட்ணம் அவர்களுக்கு எதிராக மூன்று ஊழல் பைல்கள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் விசாரணை செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் மாவட்டச் செயலாளர் திருமதி.சாள்ஸ் இருந்த நிலையில் முன்னாள் வாகரை மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர்களை கொழும்பிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு விசாரணை இடமாற்றம் வழங்கப்பட்ட போது மூன்றாவதாக விசாரணைக்காக அழைக்கப்பட இருந்தவர் திரு வில்வரெட்னம்.
மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே.க முக்கியஸ்தரிடம் மன்டியிட்டு மன்றாடியதன் விளைவாக அவர் இவரை விசாரணைகளில் இருந்து காப்பாற்றினார்.
ஆனால் விசாரணைக் கோவைகள் இன்றும் இவருக்காக காத்துக் கிடக்கின்றன இப்படிப்பட்டவர் ஊடக சுதந்திரம் பற்றி கதைப்பது வேடிக்கையானது.
No comments: