Header Ads

Header Ads

பிரித்தானியாவில் தண்டனை பெரும் முதல் பெண் இவர் தான்

காதல் கணவனை 4 வருடங்களாக வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தான், பிரித்தானியாவில் நாங்கள் இதுவரை சந்தித்ததில் மோசமான ஒரு வழக்கு என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பிபிசி தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒரு ஆவணப்படம் வெளியிடப்பட்டது. அதில், இங்கிலாந்தை சேர்ந்த பொலிஸார் தான் சந்தித்த மிகவும் மோசமான ஒரு வழக்கு குறித்து பேசியிருந்தார்.

அலெக்ஸ் ஸ்கீல் என்கிற 22 வயது இளைஞர் தன்னை விட வயதில் மூத்த பெண்ணான ஜோர்டான் வொர்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணம் முடிந்ததிலிருந்தே, தினமும் வீட்டிலிருந்து கதறும் சத்தம் கேட்டுள்ளது. பல நாட்களாகவே இதனை கேட்டு வந்த பக்கத்து வீட்டார்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், வீட்டின் கதவை தட்டியதும் வேகமாக வந்து திறந்த ஜோர்டான், மனஅழுத்ததால் பாதிக்கப்பட்டிருக்கும் என்னுடைய கணவர் தன்னை தானே தாக்கிக்கொள்கிறார் என கூறியிருக்கிறார்.

உடனே மேல் தளத்திற்கு சென்ற பொலிஸார் வீடு முழுவதும் ரத்தக்கறை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அங்கு உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த அலெக்ஸ் ஸ்கீலை மீட்டு வேகமாக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர், இந்த காயங்கள் அனைத்தும் வேறு ஒருவர் தாக்கியிருப்பதை போலவே இருக்கிறது என பொலிசாரிடம் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சிகிச்சை முடிந்ததும் அலெக்ஸ் ஸ்கீலிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், உங்கள் மனைவியால் ஏதேனும் தாக்குதல் நடத்தப்படுகிறதா என கேட்டுள்ளனர்.

ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து, இல்லை நான் தான் என்னை தாக்கிக்கொள்கிறேன். அதற்கான காரணம் தெரியவில்லை என கூறியிருக்கிறார்.

அவரது வார்த்தை மீது நம்பிக்கை வராத பொலிஸார், அன்று முதல் நோட்டமிட ஆரம்பித்துள்ளனர். சில நாட்கள் கழித்து மீண்டும், பக்கத்து வீட்டார்கள் பொலிஸாருக்கு போன் செய்துள்ளனர். மீண்டும் வீட்டிற்கு வந்த பொலிஸார், அலெக்ஸை கண்டதும் பதறியுள்ளனர்.

காரணம் என்னவென்றால், கதவை திறந்த அலெக்ஸ் உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்களுடன் நின்றுகொண்டிருந்துள்ளார். எந்த சிகிச்சையும் பெறாமல் அவை அனைத்தும் நாள்பட்ட காயங்களாக மாறியிருந்தது. அந்த சமயம் மீண்டும், உங்கள் மனைவி கொடுமைப்படுத்துகிறாரா? என பொலிஸார் கேட்டுள்ளார்.

அப்பொழுதும் மனைவியை காட்டிக்கொடுக்க அலெக்ஸ் மறுப்பு தெரிவித்து மிகவும் கூலாக மருத்துவமனை செல்லலாம் என கூறியுள்ளார்.
அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இன்னும் 10 நாட்கள் தாமதித்திருந்தால் கூட உயிர் பிழைத்திருப்பது கடினம் என கூறியுள்ளார்.
அதன்பிறகே வாய் திறந்த அலெக்ஸ், என்னுடைய மனைவியுடன் எனக்கு வாக்குவாதம் ஏற்படும் சமயங்களில் எல்லாம், தலை சீவும் பொருளை கொண்டு தாக்குவார். முதல் 3 வருடங்கள் மன ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளானேன். ஆனால் அதன்பிறகு உடல் ரீதியிலான தாக்குதல்களை அனுபவித்தேன்.

இரவு முழுவதும் தூங்கவிடாமல் சுடுதண்ணீரை மேலே ஊற்றி கொடுமை செய்வார். அது குளிர்ந்து விட்டால், மீண்டும் சூடு செய்வார். ஒரு சில நேரங்களில் கத்தியை கொண்டு என்னை குத்துவார். நான் பயந்து போய் மேல் தளம் அல்லது கழிவறைக்கு சென்றுவிடுவேன். உணவு சரியாக கொடுக்க மாட்டார்.

அவர் கூறும் ஆடையை தான் நான் உடுத்த வேண்டும். இதனால் என்னுடைய எடை அதிகமாக குறைந்துவிட்டது. அவர் எதுவும் செய்துவிடுவாரோ என்ற பயத்தில் தான் யாரிடமும் கூறவில்லை என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் ஜோர்டான் வொர்த்தை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு வழக்கினை கேட்டறிந்த நீதிபதி 7 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பிரித்தானியாவில் ஒருவரை கட்டுப்படுத்தி கொடுமைப்படுத்தியதற்காக தண்டனை பெரும் முதல் பெண் இவர் தான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments:

Powered by Blogger.