இலங்கை மக்களை அதிர்சிக்குள்ளாக்கிய பாடகர் இப்போது என்ன சொல்கிறார்
டுபாயில் பணத்திற்காகவே தாம் பாட்டுப் பாட வந்ததாகவும் அதற்காக தமக்கு கட்டணம் செலுத்தப்பட்டதாகவும் தென்னிலங்கையின் பிரபல பாடகர் அமல் பெரேரா தெரிவித்துளார்.
பாதாள உலகக் குழு சந்தேக நபரான அமல் பெரேராவிடம் டுபாய் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போதே இவ்வாறு பதில் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பான மாகந்துர மதுஷ் நேற்றைய தினம் தனது பிள்ளையின் பிறந்த தினத்தைக் கொண்டாடியபோது இலங்கை-டுபாய் பொலிஸ் அதிகாரிகளின் திடீர் நடவடிக்கையொன்றில் தனது சாகாக்களுடன் சிக்கினார்.
இதன்போது சிங்கள மக்களால் நன்கு அறியப்பட்ட பாடகர் அமல் பெரேராவும் அங்கு இருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டார்.
கைதாகிய அமல் பெரேராவிடம் டுபாய் பாதுகாப்பு அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போதே மேற்கண்டவாறு அமல் பெரேரா பதிலளித்துள்ளார்.
டுபாயில் பிறந்த தின நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பாடல் வழங்குவதற்காகவே தானும் தனது மகனும் இங்கு வந்ததாகவும் அதற்காக தமக்கு கட்டணம் செலுத்தப்பட்டதாகவும் கூறிய அமல் பெரேரா, மதுஷ் குழுவினர் தன்னை வாயை மூடிக்கொண்டு இருக்குமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
அமல் பெரேரா பாதாள உலகக் கும்பலுடன் கைதுசெய்யப்பட்டமை அவரது பெரும்பான்மை ரசிகர்களாக உள்ள சிங்கள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
No comments: