Header Ads

Header Ads

பலரையும் ஏமாற்றிய இளைஞரை சிக்க வைத்த காவல்துறை

கையடக்க தொலைபேசியை கொள்வனவு செய்வது போன்று பண மோசடியில் ஈடுபட்டு தொலைபேசியுடன் தப்பிச் சென்ற சந்தேக நபரொருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி பகுதியை சேர்ந்த 21 வயதான ஜனித் கஷான் என்ற 21 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இணையத்தளம் ஊடாக குறித்த கையடக்க தொலைபேசி உரிமையாளரின் வங்கி கணக்குக்கு பணம் வைப்பு செய்வதாக கூறி போலி ஆவணங்களை காட்டி பின்னர் தொலைபேசியுடன் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த இளைஞன் இவ்வாறு பல மோசடிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
கையடக்க தொலைபேசிகளை விற்பனை செய்யும் நபர்கள், தமது வங்கி கணக்குகளை பரிசோதிக்கும் போது அவ்வாறு பணம் ஏதும் வைப்பிலடாமை தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் பாணந்துறை, கல்கிஸ்ஸை, மிரிஹான மற்றும் கட்டுநாயக்க ஆகிய பகுதிகளில் இவ்வாறு மோசடிகளை செய்து தப்பிச் சென்றுள்ளார் என காவல் நிலையங்களில் பல முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

சந்தேக நபர் முதலில் ஹிக்கடுவை பகுதியிலும், பின்னர் நுகேகொடை பகுதியிலும் வசித்து வந்ததுடன், அவர் இரண்டு திருமணங்களை முடித்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு பல மோசடிகளை மேற்கொண்ட அவரை கைது செய்வதற்காக கட்டுநாயக்க காவல்துறையால் கையடக்க தொலைபேசியொன்று விற்பனை செய்யப்படவுள்ளதாக இணையளத்தளத்தில் விளப்பரப்படுத்தி திட்டம் தீட்டப்பட்டது.

இந்நிலையில் அதனை கொள்வனவு செய் வந்த சந்தேக நபரை கட்டுநாயக்க பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் சந்தேக நபர், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

No comments:

Powered by Blogger.