உன்னை விட உன் மனைவியை நான் அதிகம் காதலிக்கிறேன்
இந்தியாவில் திருமணமான பெண்ணுடன் தொடர்பில் இருந்த நபர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதிய கடிதம் சிக்கியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டை சேர்ந்தவர் விபுல். இவருக்கும் அல்பா என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு முன்னரே தில்வர் என்ற இளைஞருடன் அல்பாவுக்கு தொடர்பிருந்த நிலையில் திருமணத்துக்கு பின்னரும் இருவரும் தொடர்பில் இருந்தனர்.
இந்நிலையில் தில்வர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். தில்வர் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் அவர் எழுதிய கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.
அதில், விபுலும் அவர் நண்பர் காத்ராவும் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்கள். இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன்.
விபுல் அவர் மனைவி அல்பாவை காதலிப்பதை விட நான் அதிகம் காதலிக்கிறேன், என் அளவுக்கு அல்பாவை விபுலால் நேசிக்க முடியாது என எழுதப்பட்டுள்ளது.
இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டியது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது என்ற பிரிவுகளில் விபுல் மற்றும் காத்ரா மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
No comments: