ட்டுநாயக்காவில் பெண்ணொருவர் செய்த மோசமான செயல்
வெளிநாடு செல்ல முயற்சித்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 கிலோ கிராமிற்கும் அதிக நிறையுடைய கஞ்சாவை தனது பைகளில் கொண்டு சென்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யு எல்.225 என்ற விமானம் மூலம் நேற்று மாலை 6.35 மணியளவில் டுபாய் நோக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கண்டியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவரது பைக்குள் ஏனைய பொருட்களுடன் 2 கிலோ 94 கிராம் நிறையுடைய கஞ்சாவை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி எட்டு இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது
No comments: