ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சட்டத்தரணிகள் குழு ஒன்றும் சிவில் அமைப்புகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுப்பிய நீதிபதி தீபாலி விஜேசுந்தரவின் பெயர் அரசியலமைப்பு சபையினால் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு வேறு ஒருவரின் பெயரை இதுவரை பரிந்துரை செய்யாமையினால் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உச்ச நீதிமன்றத்தில் செலுப்படியாகும் தன்மை காணப்பட வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றத்தில் தலைவருடன் சேர்த்து 6 முதல் 11 வரையிலான நீதிபதிகள் குழுவொன்று காணப்பட வேண்டும்.
அரசியலமைப்பின் 137வது சரத்து மற்றும் ஜனாதிபதியினால் உச்ச நீதிமன்றத்தில் பதில் தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் சட்ட ரீதியான தலைவர் ஒருவர் செயற்பட வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
ஜனாதிபதி மற்றும்
அரசியலமைப்பு சபைக்கு இடையில் நெருக்கடி மற்றும் அதன் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் “ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள்” சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜனவரி மாதம் 9ஆம் திகதி இரண்டு வாரங்களுக்காக உச்ச நீதிமன்றத்தில் பதில் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரை ஜனாதிபதி
நியமித்தார். மீண்டும் 24 ஆம் திகதி பதில் நீதிபதி ஒருவர் அரசியலமைப்பு சபையின் அனுமதி பெறாமல் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
14 நாட்களுக்கு ஒருமுறை என இரண்டு தடவை உச்ச நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதிபதிகளை பெயரிடுவது அரசியலமைப்பு சபையின் அதிகாரத்தை மீறி செயற்படுவதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments: