Header Ads

Header Ads

முப்படையினரையும் கைது செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம்

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 67 அதிகாரிகளும், 637 படையினரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் றொஷான் குணதிலக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் திசார சமரசிங்க ஆகியோர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, “ 2015 ஜனவரிக்குப் பின்னர் முப்படைகளையும் சேர்ந்த 67 அதிகாரிகளும், 637 படையினரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் இராணுவ அதிகாரிகள் 15 பேரும், கடற்படை அதிகாரிகள் 35 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில், இராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகள் 7 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு அதிகாரிக்கும் ஒரு இராணுவச் சிப்பாய்க்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது“ என அவர்கள் இதன்போது கூட்டாக குற்றம் சுமத்தியிருந்தனர்

No comments:

Powered by Blogger.