Header Ads

Header Ads

கோப்பாயில் சிங்களத்தில் தேசிய கீதம்! ரணிலுக்கு சாமரம் வீசும் மாவட்ட செயலர்

கோப்பாய் பிரதேச செயலகத்தில் நாளை திறக்கவிருக்கும் மேலதிக நிர்வாக அலுவலக கட்டடத்திறப்பு விழாவுக்கு, இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்கின்றார்.

இதற்கென தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுலில் தேசிய கீதமானது 9.45 மணிக்கு பாடப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக பிரதமரின் உரையை அடுத்து மீண்டும் தேசிய கீதம் 10.12 க்கு சிங்கள மொழியில் பாடப் பட இருக்கின்றது.



ஒரு நிகழ்வில் கொடியேற்றுவது, தேசிய கீதம் இசைப்பது எல்லாம் ஒருதடவையே மேற்கொள்ளப்படும் வேளையில், இந்த குறித்த நிகழ்வுக்கு மட்டும் இரண்டு தடவைகள் தேசிய கீதம் பாட இருப்பதும், அதில் ஒன்று சிங்களத்தில் இருப்பதும் யாரை திருப்தி அடைய வைக்க, யாழ் மாவடட அரச அதிபர் முயற்சிக்கின்றார் என்ற கேள்வி எழுவதாக, ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

No comments:

Powered by Blogger.