உலகை உலுக்கிய புகைப்படம்: கொரோனா மருத்துவர் பிச்சைக்காரன் போல வாழ்கிறார் ஏன் தெரியுமா ?
இந்த புகைப்படம் தான் தற்போது உலகையே உலுக்கியுள்ளது. தினமும் மருத்துவமனை சென்று கொரோனா நோயாளிகளை பராமரிக்கும் ஒரு மருத்துவர். தனது சொந்த வீட்டின் பின் புறத்தில் உள்ள கார்டனில் கூடாரம் அடித்து தங்கி உள்ளார். அவரது மனைவி, மற்றும் 2 பிள்ளைகளை வெளியே நின்று தான் பார்க்கிறார்.
ஏன் எனில் அவர் சிலவேளை கொரோனா வைரஸை கொண்டு வந்து தனது குடும்பத்தாருக்கு கொடுக்க முடியும். இதன் காரணமாக அவர் வீட்டுக்கு வெளியே ஏதோ பிச்சைக்காரன் போல தங்கியுள்ளார். மாளிகை போன்ற வீடு இருந்தும், பிச்சைக்காரன் போல வாழ்ந்து வருகிறார்.
இது தான் இன்றைய மருத்துவர்களின் நிலை. இவர்கள் தான் சுய நலம் பார்க்காத மருத்துவர்கள்.
No comments: