ஈழத் தமிழ் மருத்துவர் ICU வில் கொரோனா வந்து மாறியவர்கள் இவர் உயிரைக் காப்பாற்ற முடியும்
அவசர உதவி ஒன்று கோரப்பட்டுள்ளது. சிறந்த ஈழத் தமிழ் மருத்துவரான செபரட்ணம் ஷன்முக நாதன் அவர்கள், அமெரிக்க Winthrop University மருத்துவமனையில் உயிருக்காக போராடிக் கொண்டு இருக்கிறார். இவரை கொரோனா தாக்கியுள்ள நிலையில், ஐ.சி.யூ வார்டில் அவர் இருக்கிறார். அமெரிக்காவில் கொரோனா வந்து குணமடைந்த தமிழர்கள் எவராவது சிறிதளவு ரத்தத்தை கொடுத்தால் போதும்.
அதில் இருந்து பிளாஸ்மாவை பிரித்து எடுத்து அவருக்கு கொடுத்து அவர் உயிரைக் காக்க முடியும். மருத்துவர் செபரட்ணம் அவர்கள் பல வருடங்களாக மருத்துவத்துறையில் உள்ளார். பல ஆயிரம் பேரை காத்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்த மருத்துவர். இன் நேரத்தில் நாம் அவரை கை விட முடியாது. எனவே அமெரிக்காவில் கொரோனா வந்து மாறிய தமிழர்கள் யாராவது உதவி செய்ய விரும்பினால் உடனே கீழ் காணும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கவும்.
Dr Yogendran 001609-9005458
No comments: