Header Ads

Header Ads

சற்று முன் FBI தலைவரை டொனால் ரம் வேலையில் இருந்து தூக்கி வீட்டுக்கு அனுப்பினார்

சற்று முன் அமெரிக்காவை அதிரவைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில்(உள்ளூரில்) மிகவும் சக்திவாய்ந்த உளவு நிறுவனமாக இயங்கி வரும் எப்.பி.ஐ நிறுவனத்தின் தலைவரை டொனால் ரம் வேலையால் நிறுத்தி வீட்டுக்கு அனுப்பியுள்ளார். அமெரிக்காவில் ஜனாதிபதிக்கு அடுத்தபடியாக மிகவும் சக்தி வாய்ந்த பொறுப்பில் இருப்பவர் என்று கருதப்படும், ஜேம்ஸ் கோமியே இவ்வாறு வேலையால் நிறுத்தப்பட்டுள்ளார்.

எப்.பி.ஐ தலைவராக இதுவரை காலமும் செயல்பட்டு வந்த, ஜேம்ஸ் கோமிக்கே இந்த விடையம் தெரியாதாம். அவர் எதேட்சையாக தே நீர் அருந்திக்கொண்டு TV நிகழ்ச்சி ஒன்று பார்த்துக்கொண்டு இருந்தவேளை. அவசர அறிக்கையாக இதனை ஒளிபரப்பு செய்துள்ளார்கள். அதன் பின்னரே ஜனாதிபதி ரம் TV இல் தோன்றி. தாம் எப்.பி.ஐ தலைவரை வேலையால் நிறுத்திவிட்டதாக அறிவித்து பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளார்.

இதனால் எப்.பி.ஐ நிர்வாகமே அதிர்ந்துவிட்டது என்கிறார்கள். பல உளவு வேலைகளை பார்த்து வந்த எப்.பி.ஐ மற்றும் அதன் தலைவரை , இதுபோல யாரும் அவமானப்படுத்தியது இல்லை என்று பல ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளது. TV ஐ பார்த்து தன்னை வேலையால் தூக்கிவிட்டார்கள் என்ற செய்தியை அறியவேண்டிய நிலையில், அதன் தலைவர் இருந்துள்ளார் என்பது ஒரு வெக்கக்கேடான விடையம் என்கிறார்கள் பல அமெரிக்கர்கள்.

வேலையால் நிறுத்துவது என்றால், முறையாக அறிவித்திருக்க வேண்டும் என்றும். இதனை TV மூலமாக அறிவிக்க கூடாது என்றும் பலர் கருதுகிறார்கள். நீதிமன்றில் ஜேம்ஸ் கோமி ஹிலரி கிளிங்ரனுக்கு ஆதரவாக நடந்துவிட்டதாக டொனால் ரம் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனை சாதாரண பொதுமக்கள் எவரும் ஏற்றுக்கொள்ள தயாரக இல்லை என்பதே உண்மை நிலை ஆகும்.

No comments:

Powered by Blogger.