தாய், தாத்தா, மாமா ஆகியோரால் தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி!
மொனராகலை மாவட்டத்தின் தனமல்வில பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தாத்தா மற்றும் இராணுவ சிப்பாயான மாமாவை தனமல்வில பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
தனமல்வில பகுதியின் உஸ்ஸகல என்ற கிராமத்தில் பதின்மூன்று வயது நிரம்பிய சிறுமி தனது உறவினர்களால் தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் இரண்டாவது கணவனும் தொடர்புபட்டுள்ளார்.
எனினும் அவரை கைது செய்யும் போது குறித்த நபர் தலைமறைவாகி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமி அவரது தாத்தா மற்றும் மாமா ஆகியோரால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமி மொனராகலை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
No comments: