இங்கிலாந்தில் 38 இந்தியர்கள் அதிரடியாக கைது!
இங்கிலாந்தில் விசா விதிமுறை மீறல் தொடர்பான சோதனையில் 9 பெண்கள் உள்பட 38 இந்தியர்களும், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
விசா விதிமீறல் புகார் - இங்கிலாந்தில் 38 இந்தியர்கள் கைது லண்டன்: இங்கிலாந்தில் விசா விதிமுறைகளை மீறி வெளிநாட்டினர் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மிட்லண்ட் பிராந்தியத்தில் லைசெஸ்டர் நகரில் உள்ள 2 ஜவுளி தொழிற்சாலைகளில் இங்கிலாந்து குடியேற்றத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில், போலீஸ், வருவாய்த்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த சோதனையில், 9 பெண்கள் உள்பட 38 இந்தியர்களும், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 32 பேர், விசா காலத்தை கடந்து தங்கி இருந்ததும், 7 பேர் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைந்ததும் தெரிய வந்தது. இவர்களின் விதிமீறலுக்கு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளும் உடந்தையாக இருந்தது நிரூபிக்கப்பட்டால், ஒரு தொழிலாளிக்கு 20 ஆயிரம் பவுண்டு வீதம் அந்த தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments: