பாகுபலி படத்தை புகழ்ந்து தள்ளிய ஷங்கர்!! 2.0'வை விட பிரம்மாண்டமா?
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர்கள் ஷங்கரும், ராஜமௌலியும். இருவரும் பிரமாண்ட பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் என்பதால் அவர்களின் படங்களுக்கு இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு இருக்கும்.
தற்போது 2.0 படத்தை இயக்கிவரும் ஷங்கர், ராஜமௌலியின் பாகுபலி 2 படத்தை பார்த்துள்ளார். உடனே ட்விட்டரில் அந்த படத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.
"பாகுபலி 2 படத்தை தற்போது பார்த்தேன். இந்திய சினிமாவின் பெருமை; என்னவொரு வீரம், அழகு, கம்பீரம், மியூசிக்.. பிரமித்துவிட்டேன். ராஜமௌலி, நடிகர்கள் மற்றும் டீமுக்கு ஹாட்ஸ் ஆப்" என கூறியுள்ளார்.
No comments: