வவுனியாவின் பிரபல பாடசாலையின் அதிபர் இலஞ்சஊழல் நிதி மோசடி..! திடுக்கிடும் தகவல்.
வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் பாடசாலை மாணவர்களிடமிருந்து அதிகளவு பணம் அறவிடுவதாக வன்னிமீடியா செய்திப்பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
வவுனியாவில் கனிஷ்ட வித்தியாலயங்களில் முன்னிலையில் திகழும் பாடசாலைகளில் புதுக்குளம் கனிஷ்ட மகாவித்;தியாலயமும் ஒன்று.
குறித்தி பாடசாலையைச் சூழ்ந்த விவசாயக் கிராமங்களான தேவர்குளம், சாஸ்திரிகூளாங்குளம், சுந்தரபுரம், மருக்காரம்பளை ஆகிய கிராமங்களில் விவசாயம் மற்றும் கூலிவேலை செய்யும் பெற்றோரைப் பின்புலமாகக் கொண்ட மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையே குறித்த பாடசாலை.
இந்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களிடமிருந்து வசதிக்கட்டணம், பரீட்சைக்கட்டணம், பிரத்தியோக வகுப்புகளுக்கானகட்டணம், விசேடநிகழ்வுகளுக்காண கட்டணம், புலமைப்பரிவில் போட்டிப்பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு விசேட கட்டணங்களன மாதாந்தம் ஆயிரக்கணக்காண பணங்களை திரட்டி கையாழுவதில் பாடசாலையின் அதிபர் கைதேர்ந்தவர் என்று பெற்றோர்கள் வன்னிமீடியா செய்திப்பிரிவுக்கு முறையிட்டனர்.
இதேவேளை கடந்தவருடம் புலமைப்பரிசில் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கட்டாயப்படுத்தி வகுப்பாசிரியருக்கும் தனக்கும் தலா ஒரு பவுண் தங்கச்சங்கிலிகளை இலஞ்சமாக வாங்கியமையும் இங்கு; குறிப்பிடத்தக்கது.
மேல்குறிப்பிடப்பட்ட பாடசாலை அதிபர் பாலமோட்டை குஞ்சுக்குளத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் தற்போது திருநாவற்குளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இது போன்று நிதி மோசடியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டியது யாருடைய பொறுப்பு...?
குறித்த செய்திக்கான முழுமையான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் எமது செய்திப்பிரிவின் ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் வெளியிடுவதற்கு தயாராக இருக்கின்றோம்.
No comments: