பொட்டம்மானுக்கு தகவல் வழங்கிய சிங்கள ராணுவ கப்டன் மீண்டும் மலேசியா தப்பிச் சென்றார்
விடுதலைப் புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டு அம்மானுக்கு, தகவல் வழங்கி வந்ததாக சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த நபர் இந்திக சஞ்ஜீவ. இவர் 2009ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் இருந்து தப்பி மலேசியா சென்றுவிட்டார். அதன் பின்னரே இவரை ராணுவத்தின் ரகசிய பிரிவு தேடி வந்தது. பின்னர் மலேசிய சென்ற சிங்கள ராணுவத்தினர் சிலர் இவரை கைதுசெய்ய முற்பட்டார்கள். அது நடக்காமல் போனது.
பின்னர் திடீரென அவர் இலங்கையில் வைத்து கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் இருந்த சமயம், பல வருடங்கள் கழித்து அவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டது. இன் நிலையில் பிணையில் வெளியான இந்திக்க , மீண்டும் மலேசிய சென்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் அவரை மீண்டும் கைதுசெய்யும் நோக்கம் தமக்கு இல்லை என்றும். அவரை தாம் தேடவில்லை என்றும் இலங்கை பொலிசார் கூறியுள்ளார்கள். இந்திக்கவுக்கு பொலிசாருக்கும் ஏற்பட்ட ஒரு உடன்பாடு அடிப்படையில், தான் அவரை பொலிசார் விடுவித்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.
No comments: