லண்டன் தமிழர்களே முதலில் இதனை தெரிந்து கொள்ளுங்கள்: இல்லை என்றால் ஆப்பு
பிரித்தானியாவில் சில சட்ட திட்டங்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. வாகனத்தை வேகமாக ஓட்டும் நபர்களுக்கு இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதும். பல சாதாரண பொதுமக்களே இதில் பெரிதும் பாதிக்கப்பட உள்ளார்கள். அதிலும் குறிப்பாக தமிழர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விடையம் இவை. மே மாதம் 1ம் திகதி முதல். நெடுஞ்சாலையில் 70 மைல் வேகத்தில் ஓடவேண்டிய இடத்தில் 71 மைல் வேகத்தில் ஓடினாலே இனி உங்களுக்கு கமரா படம் எடுத்து துண்டு வீட்டுக்கு வரும். அதுபோல இது நாள் வரை 30 மைல் வேகத்தில் ஓடக் கூடிய வீதியில் 33 மைல் வரை நீங்கள் ஓடலாம். 34 அல்லது 35 மைல் வேகத்தில் ஓடினால் தான் டிக்கெட் வரும்.
ஆனால் அந்த நடை முறையும் மாற்றப்பட்டுள்ளது. 30 மைல் வேகத்தில் செல்லவேண்டிய இடத்தில் உங்கள் கார் 31 மைல் வேகத்தில் சென்றாலே உடனே கமரா படம் எடுத்துவிடும். அத்தோடு மோட்டர் வேயில் உள்ள பல கமராக்கள் செயல் இழந்து காணப்படுகிறது. இவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது இவ்வாறு இருக்க கமரா அடித்தால் 3 புள்ளிகள் வெட்டப்படுவதோடு, குறைந்த அளவு தண்டப் பணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் அன் நடை முறையில் மாற்றம் வந்து. பெரும் பணத்தை தண்டமாக அறவிடுகிறார்கள்.
சில கவுன்சில்கள் £2,400 பவுண்டுகளை அதி கூடிய தண்டப் பணமாக அறவிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே வாகனம் ஓட்டும் தமிழர்கள் ஜாகிரதை.
No comments: