அணு ஆயுத தாக்குதல்.. நாங்கள் தான் முதலில் தாக்குவோம்: எச்சரிக்கை விடும் பிரித்தானியா!
வடகொரியா தனது அணு ஆயுத பலத்தை நிரூபிப்பதற்கு தொடர்ந்து அணு குண்டு சோதனை மற்றும் ஏவுகனை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு உலக நாடுகள் சில கண்டனம் தெரிவித்தும் கேட்பது போல் இல்லை. இதனால் அமெரிக்கா இது தொடர்பாக வடகொரியாவிற்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தது.
ஆனால் வடகொரியாவோ நேரடியாக அமெரிக்காவை வீழ்த்தும் திறமை தங்களிடம் உள்ளது. போர் நடந்தால் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தது.
இதன் விளைவாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், வடகொரியாவில் இருக்கும் அமெரிக்கர்களை பாதுகாப்பாக வெளியேற்றும்படி உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின்.
இதனால் போர் முனைப்பில் அமெரிக்கா, ரஷ்யா, வடகொரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் உள்ளன.
இந்நிலையில் பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் Michael Fallon, கூறுகையில், பிரித்தானியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில், தேவைப்பட்டால் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தங்கள் நாட்டை பாதுகாத்து கொள்வதற்கு, நாங்கள் முதலில் அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்றும், அது எந்த வகையான தாக்குதலாக இருக்கும் என்று கேட்ட போது, அதை பற்றி கூறமுடியாது என்றும் அவ்வாறு கூறினால் எதிரி விழித்து கொள்வதற்கு வாய்ப்பு உண்டு என்று கூறியுள்ளார்.
No comments: