யாழ். வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
தாயகம் திரும்பும் புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தி கப்பம் கோரும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தாயகம் திரும்பும் புலம் பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தி பெருந்தொகையான பணம் கப்பமாக கோரப்படுகின்றது.
இது போன்ற சம்பவங்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளன. எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினர் எவரும் முறைப்பாடுகளை வழங்குவதற்கு தயங்கி வருகின்றனர்.
மேலும், இது குறித்து தாயகம் திருப்பும் புலம்பெயர் தமிழர்கள் எச்சரிக்கையுடனும், அவதானத்துடனும் இருக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்க துணிந்து முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments: