படுகொலை செய்யப்பட்ட மாணவியும், மாணவனும்: நிர்வாண நிலையில்
இந்தியாவின் புனேவில் மாணவி மற்றும் மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனே, புஷி அணைக்கட்டு அருகே உள்ள ஐ.என்.எஸ். சிவாஜி கடற்படை பயிற்சி தளத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் ஒருவர் ஆடு மேய்த்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது அந்த பகுதியில் ஆண், பெண் உடல்கள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுகுறித்து லோனவாலா போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கை, கால் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் கிடந்த இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மீட்கப்பட்டவர்களின் உடல், தலை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்தன. சத்தம் போடாமல் இருக்க வாயிலும் துணி திணிக்கப்பட்டு இருந்தது. எனவே அவர்கள் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்தநிலையில் போலீசார் சம்பவ இடத்தில் இருந்து 2 அடையாள அட்டைகளை மீட்டனர்.
இதன் மூலம் கொலை செய்யப்பட்டவர்கள் லோனவாலாவில் உள்ள பொறியியலாளர் கல்லூரியில் படித்து வந்த சார்தக் (24), ஸ்ருதி (23) என்பது தெரியவந்தது. மேலும் உடல்கள் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சார்தக்கின் மோட்டார் சைக்கிளையும் போலீசார் மீட்டனர்.
சார்தக், ஸ்ருதி இருவரும் காதலர்கள். எனவே அவர் தனிமையில் நேரத்தை செலவிட சம்பவ இடத்திற்கு வந்தபோது, அங்கு வந்த மர்ம ஆசாமிகள் அவர்களை கொலை செய்து செல்போன், பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
No comments: