எதிர்ப்பை மீறி ஏவுகணை சோதனை - வடகொரியா
அமெரிக்காவின் கடும் எதிர்ப்புகளையும் மீறி வட கொரியா ஏவுகணை பரிசோதனையொன்றை உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை நடத்தியுள்ளது.
அணுவாயுதம் மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளை வடகொரியா கைவிடாவிட்டால், பேரழிவுகளைச் சந்திக்க நேரும் என, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் எச்சரிக்கை விடுத்த சிறிது நேரத்திலேயே இந்த ஏவுகணைப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கின் வட பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணையும் தோல்வியிலேயே முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதம் முதல் வடகொரியா சந்தித்திருக்கும் தொடர்ச்சியான நான்காவது தோல்வி இது.

No comments: