தாய்-மகள் கழுத்து அறுத்து கொடூரமாக படுகொலை - சென்னையில் பயங்கரம்
வீட்டில் தனியாக இருந்த தாய் மற்றும் மகள் ஆகியோர் கழுத்தறுத்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த தாய் ஹேமலதா, மகள் ஜெயலஷ்மி ஆகியோர் கழுத்தறுக்கப்பட்டு, மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய் மற்றும் மகளின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு, திறந்து கிடந்த காரணத்தால் நகைக்காக இக்கொலை சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும், கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: