சற்று முன் லண்டனில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்: கத்திகளோடு வெஸ் மினிஸ்டரில் நபர்
சற்று முன்னர் லண்டன் வெஸ் மினிஸ்டர்(பாரளுமன்றம்) முன்பாக 3 கத்திகளை மறைத்து எடுத்துக்கொண்டு, தாக்குதல் நடத்த என வந்த முஸ்லீம் நபர் ஒருவரை பொலிசார் மடக்கி பிடித்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. இன்றைய தினம் சன நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில். ஒரு பையில் 3 கத்திகளை ஒரு நபர் கொண்டு வந்துள்ளார்.
சந்தேகத்திற்கு இடமான ஒரு நபர் பையோடு வருவதை CCTV ல் அவதானித்த பொலிசார். தேனிக்கள் கூட்டை மொய்பது போல திடீரென அங்கே குவிந்தார்கள். அனைவரும் சேர்ந்து அவரை உடனே மடக்கிப் பிடித்துள்ளார்கள். ஆட்களை கொலை செய்ய பாவிக்கப்படும் படு பயங்கரமான கத்திகள் சகிதம் இன் நபர் வந்துள்ளார்.
பொலிசார் இவரை மடக்கிப் பிடிக்கவில்லை என்றால், இன்னும் சற்று நேரத்தில் இன் நபர் பலரை குத்திக் கொலை செய்து தனது வெறித்தனத்தை அரங்கேற்றி இருப்பார். மேலதிக செய்திகள் விரைவில் வெளியாகும் அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.
No comments: