1000 கோடியில் மகாபாரதம்! கர்ணனாக முன்னணி தெலுங்கு நடிகர் ஒப்பந்தம்
எம்.டி.வாசுதேவ் நாயர் எழுதிய ரண்டமூழம் நாவலை தழுவி 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் பீமனாக நடிக்கிறார்.
அடுத்த வருடம் துவங்கவுள்ள இந்த படத்திற்காக இந்தியாவே காத்திருக்கும் நிலையில், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா இந்த படத்தில் கர்ணனாக நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
அவரை இயக்குநர் ஶ்ரீகுமார் மேனன் இரண்டு வருடங்களுக்கு முன்பே அணுகினாராம், தற்போது மீண்டும் அணுகியபோது தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் நடிக்கிறேன் என கூறியுள்ளார்.
கர்ணன் கதாபாத்திரத்திற்கு கண்டிப்பாக முக்கியத்துவம் இருக்கும் என இயக்குனர் உறுதியளித்ததால் ரண்டமூழம் கதையில் தான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக நாகார்ஜூனா கூறியுள்ளார்.
No comments: