நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 91 பேர் பலி , 110 பேர் காணவில்லை
நாட்டில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளதுடன் 110 பேர் வரையில் காணாமல்போயுள்ளதாகவும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதுவரை 16 ஆயிரத்து 759 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 285 குடும்பங்களைச் சேர்ந்த 2042 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.
இயற்கை அனர்த்தத்தில் 17 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 482 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளனர்.
குறிப்பாக இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே மரணமானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மண்சரிவுகளில் சிக்கி காணாமல் போன நபர்களை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார், இராணுவத்தினர் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
No comments: