Header Ads

Header Ads

பிரிட்டனில் 10.30 மணிக்கு தற்கொலை தாக்குதல்: 22 பேர் பலி 59 பேர் காயம்

பிரித்தானியா ரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நேற்றைய தினம்(22) பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றுக்கு அருகாமையில் இசை நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள். அவர்கள் வெளியே செல்லும் வாசலில் வைத்து, தற்கொலை குண்டுதாரி ஒருவர் தான் கொண்டு வந்த குண்டை வெடிக்க வைத்துள்ளார்.



நெயில் பாம் என்று சொல்லப்படும், ஆணிகள் மற்றும் உலோகங்களை அதிக அளவில் கலந்து வெடிக்கவைக்கும் நாட்டு வெடிகுண்டு ஒன்றையே இவர் வெடிக்க வைத்துள்ளார். குறித்த வெடி குண்டு வீட்டில் தயாரிக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த வெடி குண்டு என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இதில் சுமார் 22 பேர் கொல்லப்பட்டதோடு. 59 பேர்வரை படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருகிறார்கள்.  பலரது உடல் பாகங்கள் சிதறி கிடந்ததாகவும். இதனை என் வாழ் நாழில் மறக்க முடியாது எனவும் , சம்பவ இடத்தில் காயம் ஏற்படாமல் தப்பிய நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு பின்னர் பிரித்தானியாவில் இது போன்ற ஒரு குண்டு வெடித்து, பல பொதுமக்கள் இறந்துள்ளார்கள். இது பிரித்தானிய பொலிசாரின் தோல்வி என்றே கூறவேண்டும் என , பலர் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.




No comments:

Powered by Blogger.