பிரான்ஸ் செல்ல முற்பட்ட 17 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்
சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட 17 இலங்கையர்கள் துருக்கியிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 17 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்றைய தினம் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி, வவுனியா, ஹலாவத்தை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புலனாய்வு பிரிவினர் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டு குறித்த 17 பேரும் சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்டிருந்தனர்.
குறித்த அனைவரும் கட்டார் சென்று அங்கிருந்து துருக்கி ஊடாக சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த அனைவரையும் கைது செய்த துருக்கி பொலிஸார், துருக்கியிலிருந்து விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளனர்.
No comments: