Header Ads

Header Ads

மே 18 முள்ளிவாய்க்கால் வணக்கநிகழ்வு ! நடந்தது என்ன ?

இதை வைத்து அரசியல் நடத்தாதீர்கள் என வார்த்தைஜாலம் மூலம் நாடகம் நடாத்தி செய்த அரசியல் பிளைப்பு ..!
பின்புலத்தில் இலங்கை இந்தியா மற்றும் உலகநாடுகளின் உளவு நிறுவனங்கள் கைவரிசை !மாற்று அரசியல் கட்சியின் கைக்கூலிகளாகவும் , ஏவல்களாகவும் ஒருசிலர் செயற்பட்டதோடு யுத்தத்தால் அவயவங்களை இழந்து , உறவுகளை இழந்து மனோவியலாக பாதிக்கப் பட்டமக்களின் உடல்வலிகளையும் ,உள்ளவலிகளையும் , வேதனையும் தமக்குச் சாதகமாகவும் தந்திரோபாயமாகவும் பயன்படுத்த அவர்களைத்தம் வலையில் வீழ்த்தி தம் அரசியல் கட்சிக்கு பலம்சேர்க்க நினைத்த கேவலம் வெளியே தெரியவந்துள்ளது !
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கையாலாகாத அரசியலில் பெரும்பாலான ஈழத்தமிழ் மக்களுக்கு கடும் விசனமுண்டு என்பது மறுக்கமுடியாத உண்மைதான் ஆனால் அதைப்பழிவாங்க உரிய இடமாக முள்ளி வாய்க்காலை தேர்வு செய்தது மிகக் கீழ்த்தனமான அசிங்கமான செயலாகும் என்பதே எம் வேதனையாகும் .
இலட்சக்கணக்கான எம் உறவுகளைம் மாவீரர்களையும் உயிர்காவு கொடுத்த புனிதமண்ணை சாக்கடையாகவும் , சந்தைக்கடையாகவும் மாற்றிவர்களை உயிர்நீத்த ஆன்மாக்கள் சபிக்குமேயன்றி ஒருபோதும் மன்னிக்காது.
அரசியல் வாதிகள் வருவார்களென முன்பே தெரிந்து வைத்திருந்தவர்கள் பொதுமக்கள் நாம்தான் இந்தநிகழ்வை நடாத்துவோம் எந்தக்கட்சித்தலைவர்களோ அல்லது தொண்டர்களோ பிரசன்னமாக வேண்டாம் எனஒரு துண்டுப்பிரசுரம் மூலமேனும் நாகரீகமான முறையில் அறைகூவல் விடுத்திருக்கலாமே..!
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர்க்கு எதிராக மக்கள் சக்தியை திரட்டி நீதிகேட்க எத்தனையோ இடங்களிருக்க மக்கள் கொத்துக்கொத்தாகஅழிந்த இடத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திய கீழ்த்தரமான சுயநலஅரசியல்வாதிகளே முதலில்நீங்கள்தான் மக்கள் மத்தியில் இருந்து துடைத்தெறியப்படவேண்டியவர்கள் என்பதே நீதியான நிதர்சனமாகும் !
இந்த அநாகரீகமான செயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் பெற்றுக்கொடுத்த தீர்வோ அல்லது நிவாரணமோ என்ன ? முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொள்ளிவைக்கக் கூட நாதியற்று இன்று வரை அந்த இடத்தில் போய் ஆகக்குறைந்தது தங்கள் உறவுகளுக்காக அழக்கூட முடியாமல் உள்ளத்தில் நித்தம் நித்தம் குமுறியழும் உலகம் முழுவதும் வாழ்ந்துகொண்டு புலம்பித்திரியும் புலம்பெயர் தமிழர்களும் இருக்கிறார்கள் என்பதையும் மறந்துபோகாதீர்கள் ..!
உறவுகளே அது மட்டுமல்ல ஈழவிடுதலையையோ ,அல்லது விடுதலைப்புலிகளையோ கொள்கைரீதியாக நேசிக்காத மாற்றுக்கருத்துக்கொண்ட மக்களும் அவர்கள் உறவுகள் சொந்த பந்தங்களும்கூட இந்த மண்ணில் சந்தர்ப்பவசமாகக் கூட உயிர்பலியாகி இருக்கிறார்கள் எனவே இந்த மண் அனைவருக்கும் சொந்தமண் இதன் வேதனை வலி எல்லோருக்கும் பொதுவானது இதில் நீதி கேட்க நீயார் என எவரைப்பார்த்தும் எவரும் தூசித்துக் கேள்விகேட்க முடியாது .
இதிலாவது ஒற்றுமையாக உறவுகளுக்காக அழவேனும் அனுமதிதாருங்கள் என உளப்பூர்வமாகவும் உரிமையோடும் உங்கள் கால்களைப்பிடித்து மன்றாட்டமாக உயிர்நீத்த ஆத்மாக்களின் மனச்சாட்சியாக கேட்டுக் கொள்கிறேன் !

No comments:

Powered by Blogger.