Header Ads

Header Ads

உயிரிழந்த குழந்தையை வைத்து நாடகமாடிய பெற்றோர்: 22 ஆண்டுகள் சிறை

பிரித்தானிய நாட்டில் உயிரிழந்த குழந்தையை வைத்து பணத்திற்காக நாடகமாடிய பெற்றோர் இருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் Rosalin Baker(25) மற்றும் Jeffrey Wiltshire(52) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்தாண்டு இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தைக்கு 16 வாரங்கள் ஆனபோது விபத்து ஒன்றில் சிக்கியுள்ளது.
இதன் விளைவாக உடல் முழுவதும் 40 எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தை உயிரிழந்ததை அறிந்த பெற்றோர் இதனை பொலிசாரிடம் இருந்து மறைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், குழந்தையின் சடலத்தை வைத்து அரசு உதவி தொகையை பெறவும் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், குழந்தையின் சடலத்தை எடுத்துச்சென்று அரசு பேருந்தில் பயணம் செய்யவதாகவும், பயணத்தின்போது குழந்தை உயிரிழந்ததாகவும் நாடகமாட வேண்டும் என இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
இத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்தும் நடந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்தபோது குழந்தை பேச்சு மூச்சின்றி உள்ளதாக தாயார் போலியாக அழுது புலம்பியுள்ளார்.
ஆனால், நபர் ஒருவர் குழந்தையை சோதனை செய்தபோது அதன் உடல் மிகவும் குளிர்ச்சியாக இருந்ததையும் குழந்தை ஏற்கனவே உயிர்ழந்து இருந்ததையும் கண்டு சந்தேகம் அடைந்துள்ளார்.
மேலும், பொலிசாருக்கு தகவல் கொடுத்த பின்னர் பேருந்தில் வைக்கப்பட்ட கமெராவில் சோதனை செய்தபோது, அதில் மனைவிக்கு கணவர் ‘குட் லக்’ சொல்லிவிட்டு செல்லும் காட்சிகள் பதிந்துள்ளது சந்தேகத்தை அதிகப்படுத்தியது.
இதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில் இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். ஆனால், இருவரின் மீது கொலை குற்றம் பதிவு செய்யப்படவில்லை.
எனினும், குழந்தையை பராமரிக்க தவறிய குற்றத்திற்காகவும், உயிரிழந்த குழந்தையை வைத்து நாடகமாடிய குற்றத்திற்காகவும் ஒவ்வொருவருக்கும் தலா 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.