ஈழத்தில் உயிரிழந்தவர்களுக்கு திதி கொடுத்த இந்திய மக்கள்
இலங்கையில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களுக்காக இந்தியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
ராமேசுவரம், அக்னி தீர்த்தக் கடற்கரையில் மக்கள் இன்று மலர்தூவி தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
இலங்கையில் இனப் படுகொலை இடம் பெற்றதனை நினைவுகூர்ந்து நினைவேந்தல் கூட்டம் ஒன்றும் இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நடைபெற்றுள்ளது.
தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் பொது மக்களும், மீனவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி சார்பாக இலங்கை போரில் உயிரிழந்தவர்களுக்காக அக்னி தீர்த்தக் கடலில் திதி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments: